Thursday, September 26, 2013

ஜப்பான் மக்களைப்பற்றி...

ஜப்பான் மக்கள் என்று சொன்னதும் மனதில் அவர்களைக் குறித்த ஒரு மரியாதை உருவாகிறது. இதற்குக் காரணம்... நிலநடுக்கம்சுனாமிஎரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் விளைவுகளைச் சந்திக்கும்போதும்,அணுகுண்டு போன்ற மனித எதிர்ப்புக்களைச் சந்திக்கும்போதும் இவர்கள் காட்டும் கட்டுப்பாடும்ஒழுங்கும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
ஜப்பான் மக்கள் என்றதும் அடுத்து நம் கவனத்தை ஈர்ப்பது அந்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை. அந்நாட்டின் மக்கள் தொகையில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை 21 விழுக்காட்டிற்கும் அதிகம். வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை விழுக்காட்டில் ஜப்பான் உலக நாடுகளில் முதலிடம் வகிக்கிறது.
தற்போது ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை கூடிவரும் நிலை காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால்2050ம் ஆண்டுக்குள் ஜப்பானில் வயது முதிர்ந்தோர் எண்ணிக்கைநாட்டு மக்கள் தொகையில் 40.5 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் வாழும் மக்களின் சராசரி வாழ்நாள் அளவுடன் ஒப்பிட்டால்ஜப்பான் மக்களின் வாழ்நாள்பொதுவாக 4 ஆண்டுகள் கூடுதலாக உள்ளது.
ஜப்பான் மக்களிடையே ஏறத்தாழ 100 விழுக்காட்டினர் எழுதபடிக்கத் தெரிந்தவர்கள். இந்நாட்டில் 4 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே வேலையற்றோர் எண்ணிக்கையில் உள்ளனர்.
ஜப்பானில் உள்ள பல தொழிற்சாலைகளில் காலையில் தொழிலாளிகள் வந்து சேர்ந்ததும்அவர்களுக்கு உடற்பயிற்சிகள் நேரம் ஒதுக்கப்படுகிறது. இவர்கள் செய்யும் உடற்பயிற்சிகளில் மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளும் இணைந்து செய்யப்படுகின்றன.

இணையத்தில், மகிழ்வைவிட கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு - சீன ஆய்வு

 உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில்கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் வாழ்வுடன் வெகுவாக ஒன்றிப்போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் Twitter. குறிப்பிட்ட ஒரு விடயத்தைப் பற்றிமக்கள் தூண்டப்பட்டதும்தமது கருத்துக்களை அவர்கள் Twitter வழியே பதிந்து விடுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்அவர்கள் மத்தியில் என்ன கருத்துகள் நிலவுகின்றன என்பதை அறிய விரும்பும் ஆய்வாளர்கள்முதலில் நாடுவது Twitter போன்ற இணையதளங்களைத்தான்.
இப்படிபட்ட சமூக இணையதளங்களில் ஒன்றுசீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் WeiboTwitterக்கு இணையான Weiboவை சீனாவில் 50 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
10 கோடி கருத்துகள் தினமும் பதிவாகும் Weibo இணையதளம் பற்றிதலைநகர் Beijingகிலுள்ள Beihangபல்கலைகழகம் நடத்திய ஆய்வில் சில சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Weibo பயனீட்டாளர்களின் சொற்பிரயோகம்உணர்வுகளை வெளிப்படுத்தும் emoticon எனப்படும் அடையாளப் பயன்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தவர்கள்கோபம்சோகம்மகிழ்வுவிரக்தி ஆகிய உணர்வுகளில்,கோபமூட்டும் பதிவுகளே மக்கள் மத்தியில் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டதைக் கண்டறிந்தனர்.
2010ம் ஆண்டில் ஆறு மாத காலம் சுமார் இரண்டு இலட்சம் Weibo பயனீட்டாளர்களின் ஏழு கோடி பதிவுகள் ஆய்வுசெய்யப்பட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

Wednesday, September 18, 2013

தொல்காப்பியர் சாலை, காப்புக்காடு

காப்புக்காடு கல்லறை தோட்டத்திலிருந்து நீரூற்று வரை புதிதாக அமைக்கப்பட்ட சாலைக்கு தொல்காப்பியர் சாலை என்று பெயரிட நல்லூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றியதற்கு நன்றி தெரிவித்து தொல்காப்பியர் கழகம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.

தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் நல்லூர் பேரூராட்சி தலைவர் திரு கே செல்வராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்



தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் 6 வது வார்டு உறுப்பினர் திரு. கிறிஸ்டோபர் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்






நல்லூர் பேரூராட்சி தலைவர் அவர்கள்  தொல்காப்பியர் சாலை என்று பெயரிட்ட தீர்மான நகலை தொல்காப்பியர் கழக நிர்வாகிகளுக்கு வழங்குகிறார்
தொல்காப்பியர் சாலை என்று பெயரிட நல்லூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்



தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு சால்வை அணிவித்தார்



தொல்காப்பியர் கழகம் சார்பில் நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது