Thursday, June 27, 2013

போதுமென்ற மனது பொன் போன்றது என்பார்கள். மாறாக எதிலும் திருப்திப்படாத மனது நரகமாகத்தான் இருக்கும்.
இவற்றைத்தான் நேர் சிந்தனை (Positive thinking) எதிர்மறை சிந்தனை (Negative thinking) என்றெல்லாம் சொல்கிறார்கள். நம்பிக்கையுள்ள மனது, அவநம்பிக்கையுள்ள மனது என்று புரியும்படி சொல்லலாம். இது வாழ்க்கை பற்றிய பார்வை மட்டுமல்ல, உடல் நலத்தோடும் தொடர்புடையது.
நேர் சிந்தனையுள்ள மனது, உடல் நலத்தோடு தொடர்புடையது.
எதிர்மறைச் சிந்தனையுள்ள மனது, நலக்கேட்டுடன் தொடர்புடையது எனலாம்.
நேர் சிந்தனையானது, உடல் நலம் பல வழிகளில் முன்னேற்றமடைய உதவுகிறது.
வாழ்நாள் அதிகரிக்கும். மனச் சோர்வு நோய்க்கான (Depression) வாய்ப்பு குறைவாகும்.
உடல் உள்ள நலன்கள் மேம்படும். மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் இறப்பதற்கான சாத்தியம் குறைவாகும்.  
நேர் சிந்தனையானது, வாழ்வின் நெருக்கீடு நிறைந்த தருணங்களில் மனம் தளரவிடாது நம்பிக்கையுடன் செயலாற்ற உதவும். இதனால் நெருக்கீட்டின் தீய விளைவுகளால் உடல்நலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது என நம்பப்படுகிறது.
நேர் சிந்தனை உள்ளவர்களுக்கு பொதுவாக வாழ்க்கை பற்றிய நலமான நிலைப்பாடு உள்ளது. இதனால் அவர்கள் பொதுவாக நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.
உங்கள் வாழ்வைப் பார்த்து நீங்களே சிரிக்கக் கற்றுக்கொண்டால் அதைவிட பெரிய பேறு எதுவும் இருக்கமுடியாது.
மனதோடு மகிழ்ச்சியாகப் பேசுங்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள்.
நேர்சிந்தனை கொண்ட மனது உங்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், உடல் நலத்தையும் கொண்டு வரும். நம்புங்கள்.!

No comments:

Post a Comment