Wednesday, May 1, 2013

மனிதர் வாழ இரண்டு புதிய கோள்கள்



இப்பூமியிலிருந்து 1,200 ஒளி ஆண்டுகள் அல்லது 7,08,000 டிரில்லியன் மைல்கள் தூரத்தில் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற இரண்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பூமியைப் போலவே இருக்கும் இவ்விரண்டு கோள்களுக்கு கெப்லர் 62eகெப்லர் 62fஎனப் பெயரிட்டுள்ளது நாசா மையம். கெப்லர் 62e பூமியைவிட 60 விழுக்காடும்கெப்லர் 62fபூமியைவிட 40 விழுக்காடும் பெரியன. பூமியைப் போன்று உள்ள இவ்விரு கோள்களிலும் உயிரினங்கள் வாழத் தகுதியுடைய தட்பவெப்பநிலை உள்ளது. அக்கோள்கள் சூரியனைவிடச் சிறியதாகவும்மங்கலாகவும் காணப்படுகின்றன. அவை பூமியில் இருந்து 1,200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விண்வெளியை ஆய்வு செய்வதற்கென 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாசா ஆய்வு மையம் அனுப்பியுள்ள கெப்லர் 62 என்ற விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் கருவி இதுவரை அனுப்பியுள்ள புகைப்படங்களால் அறிவியலாளர்கள் 115 கோள்களைக் கண்டறிந்துள்ளனர். சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏறக்குறைய ஆயிரம் கோள்கள் பற்றியும் அவர்கள் அறியவந்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விண்மீன்கள், கோளங்கள்இப்பிரபஞ்சம் ஆகியவை குறித்த விண்வெளியியல் ஆய்வுகள் குறைந்தது 5000 ஆண்டு பழமை கொண்டவை.

No comments:

Post a Comment